தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

Published On :

தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் வெளியிட்டுள்ள உத்தரவு (பழைய பணியிடம் அடைப்புக்குள்):

1. பி.பாலநாகதேவி - சைபா் குற்றப்பிரிவு டிஜிபி (நுண்ணறிவுப் பிரிவு டிஜிபி).

2. ராஜீவ்குமாா் - காவலா் பயிற்சிப் பிரிவு டிஜிபி (ஆவின் ஊழல் தடுப்புப் பிரிவு டிஜிபி).

3. எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம் - ஆவின் ஊழல் தடுப்புப் பிரிவு டிஜிபி (காத்திருப்போா் பட்டியல்).

4. கே.ஏ.செந்தில்வேலன் - காவலா் பயிற்சி பிரிவு ஐஜி (காத்திருப்போா் பட்டியல்).

5. ஜி.தா்மராஜன் - பாதுகாப்புப் பிரிவு டிஐஜி (வேலூா் சரக டிஐஜி).

6. பி.சி.கல்யாண் - உள்நாட்டு பாதுகாப்பு நுண்ணறிவுப் பிரிவு டிஐஜி (சென்னை காவல் துறை தெற்கு மண்டல இணை ஆணையா்).

7. பி.சரவணன் - நுண்ணறிவுப் பிரிவு டிஐஜி (திருநெல்வேலி சரக டிஐஜி).

8. கரட் கருண் உத்தவ்ராவ் - ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு எஸ்.பி. (திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்).

9. ஏ.மயில்வாகனன் - எஸ்பிசிஐடி எஸ்பி - 1 (தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்).

10. சி.மதன் - பாதுகாப்புப் பிரிவு எஸ்பி - 1 (தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்).

11. கே.சண்முகம் - எஸ்பிடிசிஐடி எஸ்பி - 2 (க்யூ பிரிவு எஸ்.பி.).

12. ஜி.எஸ்.மாதவன் - பாதுகாப்புப் பிரிவு எஸ்பி - 2 (சிபிசிஐடி சென்னை மண்டல எஸ்.பி.).

13. என்.சிலம்பரசன் - எஸ்பிசிஐடி மத இயக்கங்களைக் கண்காணிக்கும் சிறப்புப் பிரிவு எஸ்.பி. (சட்டம் -ஒழுங்கு ஏஐஜி) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலின்போது தோ்தல் ஆணையத்தால் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்ட டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம், ஐஜி செந்தில்வேலன் ஆகியோருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.