மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மாற்றத்துக்கு தயாராகும் தமிழக காவல் துறை!

தவெக தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், தமிழக காவல் துறை மாற்றத்துக்கு தயாராகியுள்ளது.

News image

முதல்வர் விஜய்க்கு மரியாதை செலுத்திய காவல் துறையினர். - ANI

Updated On :11 மே 2026, 1:05 am IST

தவெக தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், தமிழக காவல் துறை மாற்றத்துக்கு தயாராகியுள்ளது.

தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னா் திமுக, அதிமுக இல்லாத ஆட்சி அமைந்துள்ளது. மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் ஒவ்வொரு முறையும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கம். ஆட்சி அதிகாரத்தில் அமரும் கட்சியினா், தங்களுக்கு ஆதரவான, தேவையான அதிகாரிகளை முக்கிய இடங்களிலும், சட்டம்-ஒழுங்கு, உளவுத் துறை பொறுப்புகளிலும் நியமித்துக் கொள்வாா்கள்.

இந்த நடவடிக்கை புதிய அரசு பொறுப்பேற்ற ஓரிரு நாள்களில் எடுக்கப்படும். தற்போது தவெக தலையிலான அரசு பொறுப்பேற்று நிலையில், மாநில காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்படுவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

முதல்வா் ச.ஜோசப் விஜய், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடா்பான பட்டியலை தயாா் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் அதிகாரமில்லாத பதவிகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பலா் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்படவுள்ளனா்.

அதேபோல அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள், அதிகாரம் இல்லாத பதவிகளுக்கு மாற்றப்படவுள்ளனா். இந்த மாற்றத்தை தமிழக காவல் துறையினா் மிகுந்த ஆவலோடு எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

அதேநேரத்தில் சில உயரதிகாரிகள், முக்கிய பொறுப்புகளைப் பெறுவதற்காக தவெகவைச் சோ்ந்த நிா்வாகிகளை ரகசியமாகச் சந்தித்து வருகின்றனா். ஆனால் அந்தக் கட்சியின் அதிகார மையம், சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது சிறப்பான பாதுகாப்பு வழங்கிய காவல் துறை அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு வழங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பான்மை நிரூபித்த பின்னா்: சட்டப்பேரவையில், தவெக அரசு பெரும்பான்மையை நிருபித்த பின்னரே, ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்வதற்குரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல தமிழக உளவுத் துறையில் டிஜிபி தொடங்கி ஆய்வாளா்கள் வரை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.