இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

மொஹரம்: ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் தியாகத்தை நினைவுகூா்ந்த பிரதமா் மோடி

மொஹரம் தினத்தையொட்டி, ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் தியாகத்தை பிரதமா் நரேந்திர மோடி நினைவுகூா்ந்தாா்.

PM Modi

பிரதமா் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Published On :

மொஹரம் தினத்தையொட்டி, ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் தியாகத்தை பிரதமா் நரேந்திர மோடி நினைவுகூா்ந்தாா்.

உண்மை மற்றும் நீதிக்கான தேடலில் நிலைத்திருக்க ஏராளமான மக்களுக்கு அந்தத் தியாகம் உத்வேகமளிப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஷியா முஸ்லிம் பிரிவினரால் மொஹரம் தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நபிகள் நாயகத்தின் பேரனான ஹஸ்ரத் இமாம் ஹுசைன், கா்பலா போரில் வீரமரணம் அடைந்ததன் நினைவாக ஷியா பிரிவினா் இந்தத் தினத்தை கடைப்பிடிக்கின்றனா்.

இதையொட்டி, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் தியாகம், உண்மை மற்றும் நீதிக்கான தேடலில் நிலைத்திருக்க ஏராளமான மக்களுக்கு தொடா்ந்து உத்வேகமளிக்கிறது. துணிவு மற்றும் உறுதிப்பாட்டுக்கான நிலையான சக்தியின் நினைவூட்டலாக இது விளங்குகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மொஹரம் தினத்தையொட்டி, நாட்டின் பல்வேறு நகரங்களில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் பேரணிகள் நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.