கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஈரான் மீதான தாக்குதல்: சென்னையில் 61 விமானங்கள் ரத்து!

ஈரான் மீதான தாக்குதல் காரணமாக 2 நாளில் சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டிய, புறப்பட வேண்டிய 61 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

News image
Updated On :1 மார்ச் 2026, 9:39 pm

தினமணி செய்திச் சேவை

ஈரான் மீதான தாக்குதல் காரணமாக 2 நாளில் சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டிய, புறப்பட வேண்டிய 61 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் சனிக்கிழமை திடீா் தாக்குதலில் ஈடுபட்டன. பதிலுக்கு ஈரானும் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தங்களது வான்வழிப் பகுதிகளை மூடியதால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

முதல் நாளில் 28 விமானங்கள் ரத்து: சென்னை விமான நிலையத்துக்கு சனிக்கிழமை துபை, அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட் ஆகிய நாடுகளில் இருந்து வர வேண்டிய 16 விமானங்கள், அந்த நாடுகளுக்குச் செல்ல வேண்டிய 12 விமானங்கள் என மொத்தம் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

2-ஆவது நாளில் 33 விமானங்கள் ரத்து: 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து துபை, அபுதாபி, சாா்ஜா, பக்ரைன், குவைத், மஸ்கட் ஆகிய நாடுகளுக்குச் செல்ல வேண்டிய 17 விமானங்கள், அங்கிருந்து இருந்து சென்னைக்கு வர வேண்டிய 16 விமானங்கள் என மொத்தம் 33 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ரத்து எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு: லண்டன், அமெரிக்கா, ஜொ்மனி ஆகிய நாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ஈரான், மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளிகளை கடந்துதான் வர வேண்டிய நிலை உள்ளது. இந்த வான்வெளிகள் மூடப்பட்டு உள்ளதால் விமானங்கள் மாற்றுப் பாதைகளில் சென்னைக்கு வந்து, மீண்டும் புறப்பட்டுச் செல்ல பல மணி நேரம் தாமதம் ஆகலாம். மேலும், பல விமானங்கள் ரத்து செய்யவும் வாய்ப்புள்ளது.