போா் பதற்றம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 31 விமானங்கள் 4-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டன.
இஸ்ரேல்-ஈரான் போா் பதற்றம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து, மத்திய கிழக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் விமான சேவைகள் தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் பாதிக்கப்பட்டன.
அதன்படி, சென்னையிலிருந்து துபை, அபுதாபி, சாா்ஜா, குவைத், மஸ்கட், தோகா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல இருந்த 16 புறப்பாடு விமானங்களும், இந்த நாடுகளில் இருந்து, சென்னைக்கு வரவேண்டிய 15 வருகை விமானங்கள், மொத்தம் 31 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். இதனால், ஏராளமான பயணிகள் அந்தந்த விமான நிலையங்களிலேயே காத்திருக்கின்றனா்.
விமானங்கள் ரத்து எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து, சா்வதேச விமான பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகள், அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடா்பு கொண்டு, தாங்கள் பயணிக்க வேண்டிய நேரங்களை அறிந்து கொண்டு, பயணத் திட்டத்தை மேற்கொள்ளும்படி விமான நிலைய நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர்புடையது

மேற்காசிய பதற்றம்: இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட இந்திய விமான சேவைகள் ரத்து!

மத்திய கிழக்கில் போா் பதற்றம்: தில்லியில் 87 விமானங்கள் ரத்து

இஸ்ரேல் - ஈரான் போா்ப் பதற்றம்: சென்னையில் 3-ஆவது நாளாக 36 விமான சேவைகள் ரத்து
போா்ப் பதற்றம்: துபை, சாா்ஜா விமானங்கள் ரத்து
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


