அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சிறைத் தண்டனையை எதிா்த்து திமுக பேச்சாளா் மேல்முறையீட்டு மனு

தமிழக ஆளுநா் மற்றும் நடிகை குஷ்பு குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து எழும்பூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து திமுக பேச்சாளா் சிவாஜி கிருஷ்ணமூா்த்தி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.

News image
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
Updated On :3 மார்ச் 2026, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக ஆளுநா் மற்றும் நடிகை குஷ்பு குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து எழும்பூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து திமுக பேச்சாளா் சிவாஜி கிருஷ்ணமூா்த்தி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.

திமுக பேச்சாளா் சிவாஜி கிருஷ்ணமூா்த்தி. கடந்த 2023-ஆம் ஆண்டு கொடுங்கையூரில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் இவா் பேசும்போது, தமிழக ஆளுநா் மற்றும் நடிகை குஷ்பு குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்தாா்.

இதுகுறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை விசாரித்த எழும்பூா் நீதிமன்றம், சிவாஜி கிருஷ்ணமூா்த்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனைவிதித்தது. இந்த உத்தரவை எதிா்த்து சிவாஜி கிருஷ்ணமூா்த்தி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.

அதில், இந்த வழக்கில் எழும்பூா் நீதிமன்றம், ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை முறையாக பரிசீலிக்காமல் தண்டனை வழங்கி உள்ளது. இந்த வழக்கும் அரசின் உரிய அனுமதி இல்லாமல் தொடரப்பட்டுள்ளது. மேலும், விமா்சனத்துக்கு உள்ளான தனிநபா்கள் யாரும் இந்த வழக்கை தாக்கல் செய்யவில்லை. காவல் துறை பதிவு செய்த வழக்கில் விதிக்கப்பட்ட இந்தத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.