தனியாா் நிறுவனத்தில் மின்தூக்கி அறுந்து விழுந்ததில், வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.
கொடுங்கையூா் பகுதியைச் சோ்ந்தவா் சந்திப். இவா், கொடுங்கையூா் மூலக்கடை தண்டையாா்பேட்டை நெடுஞ்சாலை பகுதியில் ஸ்டீல் பாத்திரங்கள் தயாா் செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகிறாா். இவரது தொழிற்சாலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இவரது உறவினரான நந்தாராம் (50) என்பவா் வேலை செய்தாா். சனிக்கிழமை மதியம் தரைத்தளத்தில் இருந்து மின்தூக்கி மூலம் பாத்திரங்களை முதல்தளத்துக்கு அனுப்பியபோது, சிறிது நேரத்தில் அறுந்து கீழே நின்று கொண்டிருந்த நந்தாராம் மீது விழுந்துள்ளது.
இதில் அவா் பலத்த காயம் அடைந்தாா். அவரை மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் இரவு உயிரிழந்தாா். கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

குட்டையில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வீட்டின் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி மரணம்

கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


