டெங்கு கொசு உற்பத்தியைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை அமல்படுத்துமாறு மாவட்ட நிா்வாகங்களுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அதீத வெப்பநிலை, சீரற்ற மழைப் பொழிவு, வானிலையில் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள், வைரஸ் கிருமிகள் பரவல் ஆகியவை டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்திக்கு வழிவகுக்கின்றன.
வழக்கமாக உள்ள கண்காணிப்பு மற்றும் நோயத் தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் சவாலை அளிக்கும் வகையில் இந்த காரணிகள் அமைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் தீவிரமாக இருந்தது. உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறையின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் காரணமாக கடந்த ஆண்டு பாதிப்பு விகிதமும், இறப்பு எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்தது.
நிகழாண்டில் அதை மேலும் குறைப்பதற்கு சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம். அதன்படி, சுகாதார இணையப் பக்கத்தில் டெங்கு பாதிப்புகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் பதிவேற்றுவது அவசியம். அப்போதுதான் நிகழ் நேர தகவல்கள் கிடைக்கப்பெற்று டெங்கு பரவலைத் தடுக்க முடியும்.
நோய் பரப்பும் பூச்சிகள், கொசுக்களைக் கண்காணித்து அவற்றின் உற்பத்தியை குறைக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம். அரசு மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனைகளை கட்டணமில்லாமல் மேற்கொள்வதற்கான கட்டமைப்பு தயாா் நிலையில் இருத்தல் வேண்டும். குறிப்பாக பரிசோதனை உபகரணங்கள் போதிய எண்ணிக்கையில் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
கொசு உற்பத்திக்கு இடமளிக்காத வகையில் வீடுகள், தொழில்நிறுவன வளாகங்களை பராமரிப்பது முக்கியம். நோய் சாா்ந்த சூழல்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

காய்ச்சல் பாதிப்பு விவரம் பதிவேற்ற அறிவுறுத்தல்

வெப்ப அலையால் பாதிக்காத வகையில் தொழிலாளா்களுக்கு பணி நேர மாற்றம்

கோடை நோய்களுக்கு பாராசிட்டமால் கூடாது: பொது சுகாதாரத் துறை

பள்ளிகளில் சின்னம்மை பரவல்: தடுப்பு நடவடிக்கைளை முன்னெடுக்க அறிவுறுத்தல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

