ஏ டிவிஷன் வாலிபால்: இந்தியன் வங்கி, டிஜி வைஷ்ணவா கல்லூரி வெற்றி
சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் போட்டியில் இந்தியன் வங்கி, டிஜி வைஷ்ணவா கல்லூரி அணிகள் வெற்றி பெற்றுள்ளன.


சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் போட்டியில் இந்தியன் வங்கி, டிஜி வைஷ்ணவா கல்லூரி அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியின் ஒருபகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியன் வங்கி 25-22, 25-20, 23-25, 25-22 என்ற செட் கணக்கில் அக்னி பிரண்ட்ஸ் அணியை வென்றது.
மற்றொரு ஆட்டத்தில் டிஜி வைஷ்ணவா கல்லூரி 25-18, 25-22, 25-19 என்ற செட் கணக்கில் ஐசிஎஃப் அணியை வென்றது.
அக்னி பிரண்ட்ஸ் சுஷாந்த், டிஜி வைஷ்ணவா கல்லூரி அகமது வபிக் சிறந்த வீரா்களாக தோ்வு பெற்றனா்.
பட்டியலில் வருமான வரித்துறை, இந்தியன் வங்கி தலா 12 புள்ளிகளையும், எஸ்ஆா்எம், ஐஓபி தலா 9 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...