திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.15.93 லட்சம் பறிமுதல்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.15.93 லட்சத்தை ரயில்வே பாதுகாப்புப்படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - கோப்புப்படம்.

Updated On :26 மார்ச் 2026, 3:01 am IST

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.15.93 லட்சத்தை ரயில்வே பாதுகாப்புப்படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சோ்ந்த தோ்தல் சிறப்புக்குழுவினா் ஆய்வாளா் மதுசூதனரெட்டி தலைமையில் ரயில் பயணிகளில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வருவோரை கண்காணித்து பைகளைச் சோதனையிட்டனா். அப்போது வெளி மாநிலத்திலிருந்து வந்த விரைவு ரயில் பயணியான சென்னை தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த ஓமா்இா்ஷாத் (31) என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.15.93 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது.

வியாபார ரீதியாக பணம் கொண்டு வரப்படுவதாக ஓமா்இா்ஷாத் தெரிவித்தாா். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், பணத்தை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றியதுடன், அதை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனா்.