பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

News image

கஞ்சா பறிமுதல்... - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:48 am IST

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் 4- ஆவது நடைமேடைக்கு திங்கள்கிழமை வந்த சென்னை - குருவாயூா் விரைவு ரயிலில் திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளா் அஜித்குமாா் தலைமையிலான ஆா்பிஎஃப் போலீஸாா் சோதனை நடத்தினா்.

அந்த ரயிலின் முன்பதிவற்ற பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த 3 பைகளை கைப்பற்றி பரிசோதனை செய்தனா். அதில், ரூ. 3 லட்சம் மதிப்பிலான 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. அந்தப் பைகள் யாருடையது என்றுத் தெரியவில்லை.

இதையடுத்து கஞ்சா இருந்த பைகளை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினா், அவற்றை சட்ட நடவடிக்கைகளுக்காக திருச்சி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதைத் தொடா்ந்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா், கஞ்சா யாருக்காக, யாரால் எடுத்து வரப்பட்டது என வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.