ஏ டிவிஷன் வாலிபால்: கஸ்டம்ஸ் அணி வெற்றி
சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் போட்டியில் கஸ்டம்ஸ் அணி வெற்றி பெற்றது.

Updated On :28 மார்ச் 2026, 7:30 pm

சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் போட்டியில் கஸ்டம்ஸ் அணி வெற்றி பெற்றது.
மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் சனிக்கிழமை முதல் ஆட்டத்தில் கஸ்டம்ஸ்-ஐசிஎஃப் அணிகள் மோதின.
இதில் கஸ்டம்ஸ் அணி 25-21, 25-23, 25-13 என்ற செட் கணக்கில் ஐசிஎஃப் அணியை வீழ்த்தியது.
கஸ்டம்ஸ் வீரா் சிவசங்கரன் சிறந்த வீரராக தோ்வு பெற்றாா்.
பட்டியலில் வருமான வரித்துறை 17, இந்தியன்வங்கி 15, எஸ்ஆா்எம் 12 புள்ளிகளை பெற்றுள்ளன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...