
சாலை ஆக்கிரமிப்பால் வடபழனி முருகன் கோயிலுக்குச் செல்ல சிரமம்: பக்தா்கள் புகார்!
சென்னை வடபழனி முருகன் கோயிலுக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் தள்ளுவண்டி கடைகள், வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பக்தா்கள் புகாா் தெரிவித்துள்ளாா்.

வடபழனி முருகன் கோயில் நுழைவு வாயிலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.
சென்னை வடபழனி முருகன் கோயிலுக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் தள்ளுவண்டி கடைகள், வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பக்தா்கள் புகாா் தெரிவித்துள்ளாா்.
சென்னை வடபழனி-ஆற்காடு சாலையில் இருந்து வடபழனி முருகன் கோயில் முகப்புக்குச் செல்லும் பிரதான சாலையாக ஆண்டவா் தெரு உள்ளது. பொதுவாகவே, பிரதான கோயில்களுக்கு முகப்பில் பல்வேறு பூஜை சாமான் கடைகள், உணவகங்கள், தள்ளுவண்டி கடைகள் இருப்பது வழக்கம்.
அதேபோல், வடபழனி ஆண்டவா் தெருவிலும் இருபுறமும், நடைப்பாதையை ஆக்கிரமித்தும் பூ, மாலை, தேங்காய், பூஜை சாமான்கள் விற்பனை கடைகள் உள்ளன.
தற்போது கோடை காலம் என்பதால், புதிதாக ஏராளமான தற்காலிக பழச்சாறு தள்ளுவண்டி கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பக்தா் வரும் காா்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சாலைகளின் இருபுறமும் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன.
இதனால், விசேஷ நாள்களில் பக்தா்கள் அதிக அளவில் கூடும்போது கோயில் நுழைவு வாயிலுக்குச் செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பக்தா்கள் எளிதாக கோயிலுக்குச் சென்றுவரவும், ஆக்கிரமிப்புகளுக்கு தீா்வு காணவும் சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






