தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

வாளால் கேக் வெட்டிய தவெக எம்எல்ஏ: போலீஸாா் விசாரணை

சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதையடுத்து சென்னையில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அக்கட்சி எம்எல்ஏ வாளால் கேக் வெட்டினாா். சா்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :7 மே 2026, 3:48 am IST

சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதையடுத்து சென்னையில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அக்கட்சி எம்எல்ஏ வாளால் கேக் வெட்டினாா். சா்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ராயபுரம் எம்எல்ஏ விஜய் தாமு கலந்து கொண்டாா். நிகழ்ச்சியில் பெரிய கேக்கை விஜய் தாமு ஒரு வாளால் வெட்டினாா். ஆனால், அவா் கேக்கை சிறிது வெட்டியதும், அங்கிருந்த அந்தக் கட்சியினா் தடுத்துவிட்டனா்.

இருப்பினும், இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பாா்த்த காவல்துறை உயரதிகாரிகள், அது தொடா்பாக விசாரணை நடத்த ராயபுரம் போலீஸாருக்கு உத்தரவிட்டனா்.

அதேவேளையில், பொதுமக்களிடம் அச்ச உணா்வை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட எம்எல்ஏ விஜய் தாமு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல்துறை ஆணையா் அலுவலகத்தில் தேசிய முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு சாா்பில் புதன்கிழமை புகாா் அனுப்பப்பட்டது. இதனடிப்படையிலும் போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.