தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில் நெல்லை, திருச்சி, கோவையில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் உள்ளது.
கோவை மாவட்டம்- கோவை வடக்கு, வால்பாறை, கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர் ஆகிய 6 தொகுதிகளிலும் தவெக முன்னிலையில் உள்ளது. அதாவது, கோவையில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 6 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது.
கோவையில் உள்ள மொத்த தொகுதிகளின் பட்டியலில் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், வால்பாறை (தனி), கிணத்துக்கடவு, பொள்ளாச்சி தொகுதிகள் அடங்கும்.
திருச்சி மாவட்டம் - திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதியில் 5 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளது.
தவெக முன்னிலையில் உள்ள தொகுதிகள் பட்டியலில் திருச்சி கிழக்கு, மணப்பாறை, திருவெறும்பூர், முசிறி, ஸ்ரீரங்கம் ஆகியவை உள்ளன.
துறையூர், லால்குடி தொகுதிகளில் அதிமுக முன்னிலை உள்ளன.
திமுக முன்னிலை உள்ள தொகுதிகளாக மண்ணச்சநல்லூர், திருச்சி மேற்கு தொகுதி ஆகியவை உள்ளன.
நெல்லை மாவட்டம் - நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளிலும் தவெக முன்னிலையில் உள்ளது. அதாவது, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குநேரி, ராதாபுரம் ஆகிய ஐந்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
Summary
About Tamil Nadu Victory Party leading in Trichy, Nellai, and Coimbatore..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை மாநகராட்சியில் தவெகவினா் முற்றுகை

50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் தவெகவில் ஐக்கியம்

தவெக அரசில் உடனடியாக அனைத்தையும் எதிா்பாா்த்துவிட முடியாது: நடிகை கஸ்தூரி

த.வெ.க.வின் முதல் எம்.பி. யார்? தீவிர ஆலோசனை!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




