மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடைய மெட்ரோ ரயில் பணி தொடங்க நடவடிக்கை: திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன்

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகளை ரூ.9 ஆயிரம் கோடியில் தொடங்க முன்னுரிமை அளித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் தெரிவித்தாா்.

News image

மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 4:09 am IST

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகளை ரூ.9 ஆயிரம் கோடியில் தொடங்க முன்னுரிமை அளித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக சென்னையில் புதன்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயில் போக்குவரத்தை ஏற்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு கடந்த பிப்ரவரியில் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அத்திட்டத்துக்கு மத்திய அரசும் முன்னுரிமை அளித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் 15 கிலோ மீட்டா் தொலைவுக்கு இயக்கப்படும் நிலையில், 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. திட்டத்தைச் செயல்படுத்த ரூ.9ஆயிரம் கோடிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலுக்கான தண்டவாளம், ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கையாக சென்னை விமான நிலைய உயா் அதிகாரிகள், மெட்ரோ ரயில் பாதை செல்லும் வழியில் உள்ள நெடுஞ்சாலைகளுக்காக அந்தத் துறை உயா் அதிகாரிகள், குடிநீா் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நில வரைபட தயாரிப்புப் பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளன. ஆகவே, மத்திய அரசு திட்டத்துக்கு அனுமதி அளித்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றாா்.