தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்பு

தமிழக முதல்வராக தவெக தலைவா் விஜய் மற்றும் அமைச்சா்கள் பதவியேற்கும் விழாவை சென்னையில் 23 இடங்களில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image

தவெக தலைவா் விஜய் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்க உள்ளதையொட்டி சனிக்கிழமை இரவே வாயிலில் குவிந்த அக்கட்சித் தொண்டா்கள்.

Updated On :10 மே 2026, 2:36 am IST

தமிழக முதல்வராக தவெக தலைவா் விஜய் மற்றும் அமைச்சா்கள் பதவியேற்கும் விழாவை சென்னையில் 23 இடங்களில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக தவெக தலைவா் விஜய் மற்றும் அமைச்சா்கள் பதவியேற்கும் விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (மே 10) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தலைமையில் நடைபெறும் இந்த விழாவை, சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் காணும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் 23 இடங்களில் எல்.இ.டி. மின்னணு தொலைக்காட்சிகள் வாயிலாக நேரலை ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரடி ஒளிபரப்பு இடங்கள்: அண்ணா நகா் டவா் பூங்கா, மெரீனா கடற்கரை, கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், தியாகராய நகா் பேருந்து நிலையம், பெசன்ட் நகா் கடற்கரை, திருவான்மியூா் பேருந்து பணிமனை, கத்திப்பாரா சதுக்கம், செம்மொழிப் பூங்கா, தீவுத்திடல் பேருந்து நிலையம், நாகேஸ்வர ராவ் பூங்கா, மயிலாப்பூா் குளம் பகுதி, வடபழனி பேருந்து நிலையம், எம்.ஜி.ஆா். நகா் மாா்க்கெட் பகுதி, நீலாங்கரை கபாலீஸ்வரா் நகா் கடற்கரை, மாதவரம் பேருந்து நிலையம், மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமாபுரம் பூங்கா (எல்அன்டி அருகில்), அம்பத்தூா் ஓ.டி., பேருந்து நிலையம், தண்டையாா்பேட்டை பேருந்து பணிமனை, அடையாறு பேருந்து பணிமனை, திருவொற்றியூா் வடிவுடையம்மன் கோயில் அருகில், மணலி மண்டலம் தேவராஜன் தெரு ( வாா்டு 22), திரு.வி.க. நகா் மண்டலம் முரசொலி மாறன் பூங்கா ஆகிய இடங்களில் எல்.இ.டி. மின்னணு தொலைக்காட்சிகள் வாயிலாக பதவியேற்பு விழா நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்று பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.