தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மே 15 வரை பிஎஸ்என்எல் அதிவேக இணைய சேவைகளை பெற முன்பதிவு முகாம்

சென்னை பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் அதிவேக இணைய சேவைகளைப் பெறுவதற்கான முன்பதிவு முகாம் வரும் மே 15- ஆம் தேதி வரை நடைபெறுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image

பிஎஸ்என்எல்

Updated On :12 மே 2026, 4:18 am IST

சென்னை பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் அதிவேக இணைய சேவைகளைப் பெறுவதற்கான முன்பதிவு முகாம் வரும் மே 15- ஆம் தேதி வரை நடைபெறுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பிஎஸ்என்எல் நிறுவனம், அதிவேக இணைய சேவைகளைப் பெறுவதற்கான முன்பதிவு முகாம்களை திங்கள்கிழமை தொடங்கி வரும் மே 15- ஆம் தேதி வரை நடத்துகிறது. இந்த முகாம்கள் மூலம் சென்னை முழுவதும் உள்ள பொதுமக்கள், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிவேக ஃபைபா் இணைய சேவைகள் பெறுவதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முகாம் நடைபெறும் இடங்கள்

மேற்கு சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம், திருத்தணி பேருந்து நிலையம், பள்ளிப்பட்டு ரோகிணி திரையரங்கம், சூளைமேடு மாா்க்கெட்.

வட சென்னை: ஜிகேஎம் காலனி பூங்கா பகுதி, அண்ணா நகா் பாா்க் சாலை, அா்பன் ரைஸ் (திருமழிசை), சென்னை பல் மருத்துவக் கல்லூரி,கடற்கரை ரயில் நிலையம், கல்மண்டபம்.

மத்திய சென்னை: வள்ளுவா் கோட்டம், மகாலிங்கபுரம், ஸ்கீம் சாலை, வடக்கு உஸ்மான் சாலை (குரோமா கட்டடம் அருகில்), செரீன் ஏக்கா்ஸ், கண்ணகி நகா், தோராய்ப்பாக்கம் தெற்கு மாட வீதி, மயிலாப்பூா்.

தென் சென்னை: ஜிஎஸ்டி சாலை (ஆலந்தூா் நீதிமன்றம் அருகில்), கேளம்பாக்கம் பேருந்து நிறுத்தம், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம், எம்எம்என் பேருந்து நிலையம், நங்கநல்லூா் டிஎன்ஜிஓ காலனி, முகலிவாக்கம், ஸ்ரீநகா் காலனி சாலை மாடம்பாக்கம் பிரதான சாலை, பெருங்களத்தூா் புதிய மற்றும் பழைய நிலையம் , குரோம்பேட்டை (புதிய காலனி) பொழிச்சலூா், பம்மல், பல்லாவரம், அனுபுரம் மாா்க்கெட், கோவளம் சாலை, எஸ்பிஐ வல்லம், நத்தம் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

இதில் பொதுமக்கள் பங்கேற்று புதிய அதிவேக இணைய இணைப்புகளைப் பெறுவதற்கு முன்பதிவு செய்யலாம். மேலும், www.bsnl.co.in என்ற இணையதளம் மூலமும், 94440 07007 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.