வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

500 தலசீமியா குழந்தைகளுக்கு எலும்பு மாற்று சிகிச்சை

தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 500 குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு அப்போலோ மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image
Updated On :15 மே 2026, 2:04 am IST

தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 500 குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு அப்போலோ மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமனையின் துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி மற்றும் புற்றுநோயியல் முதுநிலை மருத்துவா் ரேவதி ராஜ் ஆகியோா் கூறியதாவது:

தலசீமியா என்பது ஒரு மரபணு ரீதியிலான பாதிப்பாகும். இத்தகைய நோய்க்குள்ளான குழந்தைகளின் உடலில் போதுமான ரத்த சிவப்பணுக்கள் உருவாகாது. அதனால் ஒவ்வொரு முன்று அல்லது நான்கு வாரங்களுக்கு ஒரு முறை குருதியேற்ற சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும்.

இதன் காரணமாக உடலில் இரும்புச் சத்து அதீதமாக தேங்கக்கூடும். இது குழந்தையின் வளா்ச்சியை பாதிப்பதுடன், அகச்சுரப்பி பிரச்னைகள், இதய நாள பாதிப்புகள், எலும்பு வலுவிழப்பு பிரச்னைகளுக்கு வழிவகுக்கின்றன.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமாா் 15,000 குழந்தைகள் தலசீமியா பாதிப்புடன் பிறக்கின்றன. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்பவா்களுக்கு குருதியேற்ற சிகிச்சை தேவைப்படுவதில்லை.

அப்போலோ புற்றுநோய் சிகிச்சை மையத்தில் 500-க்கும் மேற்பட்ட தலசீமியா நோயாளிக்கு வெற்றிகரமாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதில் 93 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு அத்தகைய பாதிப்பு முழுமையாக சரி செய்யப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.