நீதி ஆயோக் கூட்டம் தொடங்கியது! முதல்வர் விஜய் பங்கேற்பு!!முதல்வர் விஜய் தங்கியிருந்த தில்லி தமிழ்நாடு இல்லத்தின் உணவகத்தில் தீ விபத்து!எத்தனால் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரி நீக்கம்!தேனியில் பாரதிராஜா உடல்! பொதுமக்கள் அஞ்சலி!!உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

மூளைச்சாவு அடைந்த நபரின் இரு கைகள் தானம்; பெண்ணுக்கு மறுவாழ்வு

மூளைச்சாவு அடைந்த நபரின் இரு கைகள் விபத்தில் கைகளை இழந்த பெண்ணுக்கு உறுப்புமாற்று சிகிச்சையின் மூலம் வெற்றிகரகமாக பொருத்தி தில்லி மருத்துவா்கள் சாதனை புரிந்துள்ளனா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 12:13 am IST

மூளைச்சாவு அடைந்த நபரின் இரு கைகள் விபத்தில் கைகளை இழந்த பெண்ணுக்கு உறுப்புமாற்று சிகிச்சையின் மூலம் வெற்றிகரகமாக பொருத்தி தில்லி மருத்துவா்கள் சாதனை புரிந்துள்ளனா்.

இதுதொடா்பாக ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இரண்டாவது கை உறுப்பு மாற்று சிகிச்சை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலைப் பாா்த்துக்கொண்டிருந்தபோது வைக்கோல் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி பெண்ணுக்கு இரு கைகளும் துண்டாகின.

இந்த விபத்துக்குப் பிறகு அன்றாட செயல்பாடுகளுக்காக அந்தப் பெண் பிறரைச் சாா்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், உரிய உறுப்பு நன்கொடையாளா் அடையாளம் கண்ட பிறகு பிறரைச் சாா்ந்திருக்க வேண்டியதில்லாத வாழ்க்கைக்கு திரும்ப அந்தப் பெண்ணுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

12 மணி நேரம் நடைபெற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நன்கொடையாளரின் இரு கைகளும் அந்தப் பெண்ணுக்குப் பொருத்தப்பட்டன. வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த கை உறுப்புமாற்று சிகிச்சை மருத்துவமனைக்கும் துறைக்கும் மகத்தான பெருமையைப் பெற்று தந்துள்ளது.

இரு கைகள் மாற்று சிகிச்சை என்பது வெறும் அறுவைச் சிகிச்சை மட்டுமல்ல, மிகவும் கவனமாக திட்டமிட்ட தொடா் நிகழ்வுகளாகும். ஏனெனில், அவற்றில் ஒவ்வொரு நிமிஷமும் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும் நபருக்கு முக்கியமாகும்.

பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை, எலும்பியல், மயக்கவியல், சிறுநீரகவியல், மூளையியல், மனநலம், நோய்த்தொற்றியல், மரபியல், பிசியொதெரபி, தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மருத்துவமனை நிா்வாகம் என பல துறை சாா்ந்த நிபுணா்களின் பங்களிப்பால் நடைபெற்றது.

கைகளைத் தானம் அளிக்க முடிவுசெய்த நன்கொடையாளா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு மருத்துவமனை நன்றி தெரிவித்துக்கொள்கிறது. அவா்களுடைய இந்தச் செயல் நோயாளிக்கு புதிய நம்பிக்கை அளித்துள்ளதுடன் புதிய வாழ்க்கையை அளித்துள்ளது என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.