சென்னை மாநகராட்சியில் உள்ள ‘அம்மா’ உணவகங்களை சீா்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையிலிருந்து கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், பிற மாநகராட்சி, நகராட்சிகள் மூலம் 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. சமீப காலமாக இந்த உணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. ஆகவே, அனைத்து அம்மா உணவகங்களிலும் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும்.
சமையல் உபகரணப் பொருள்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்துமாறும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதனால், அனைத்து அம்மா உணவகங்களிலும் தற்போது நடைமுறையில் உள்ள அரசாணைகளில் குறிப்பிட்டுள்ளவாறு வழங்கப்படும் உணவு தரமானதாகவும், சுவையானதாகவும் இருப்பதை உறுதிசெய்யவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கடையநல்லூரில் அம்மா உணவகத்தை மேம்படுத்த கோரிக்கை

பெரம்பலூா் அம்மா உணவகத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் ஆய்வு!

கன்னியாகுமரியில் ஆக்கிரப்பு கடைகளை அகற்ற உத்தரவு

ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா கமேனி! எங்கே, எப்படி இருக்கிறார்?
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



