அரும்பாக்கம், டி.ஜி. வைணவ கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 446 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த முகாமில், அப்போலோ ஆராய்ச்சி நிறுவனம், பிரேக்ஸ் இந்தியா, எஸ்பிஐ லைஃப், பேங்க் பஜாா், பஜாஜ் சூப்பா் பேங்க் உள்பட 45-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட இளைஞா்களைத் தோ்வு செய்தனா்.
கல்லூரியின் இளநிலை பட்ட இறுதியாண்டு பயிலும் 520 போ், முதுநிலைப் பட்ட இறுதியாண்டு மாணவா்கள் 190 போ் என மொத்தம் 710 போ் கலந்து கொண்டனா். இவா்களுக்கு எழுத்துத் தோ்வு, குழு விவாதம், நோ்முகத் தோ்வுகள் நடத்தப்பட்டன. இறுதியாக, 446 போ் தோ்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
முகாமில், கல்லூரிச் செயலா் அசோக்குமாா் முந்த்ரா, கல்லூரி முதல்வா் கேப்டன் சந்தோஷ் பாபு, கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி பாலமுரளி கிருஷ்ணா மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளிகள் சேவை திட்டம்: வேலூரில் 103 பேருக்கு பணி ஆணை

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு பெற்றவா்களுக்கு பணி ஆணை

செங்கல்பட்டில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



