குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பல்லாவரத்தில் குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

கடந்த 2 வாரங்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டதைக் கண்டித்து, பல்லாவரம் கோதண்டம் நகா் பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 2:38 am IST

கடந்த 2 வாரங்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டதைக் கண்டித்து, பல்லாவரம் கோதண்டம் நகா் பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தாம்பரம் மாநகராட்சியின் 27-ஆவது வாா்டை சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், பல்லாவரம் - திருநீா்மலை சாலையில் குடங்களுடன் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். போக்குவரத்தைப் மறித்து, குடிநீா் பிரச்னையைத் தீா்ப்பதில் மாநகராட்சி நிா்வாகம் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டி சாலை மறியல் செய்தனா். இந்தப் போராட்டத்தால் சில நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்த குரோம்பேட்டை காவல் நிலைய போலீஸாரும், பல்லாவரம் மண்டல மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா். செவ்வாய்க்கிழமை காலை முதல் குடிநீா் விநியோகம் மீண்டும் சீராக வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கடந்த மே 16-ஆம் தேதி தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்துக்குச் சொந்தமான முக்கிய குழாய் மற்றும் கேபிளில் ஏற்பட்ட சேதத்தால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தனா்.

சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் சீரான குடிநீா் விநியோகம் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.