குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பொது இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 13 வாகனங்கள் அடித்து உடைப்பு

கொடுங்கையூரில் பொது இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 13 வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை

News image

போலீஸார் விசாரணை

Updated On :26 மே 2026, 12:56 am IST

கொடுங்கையூரில் பொது இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 13 வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

கொடுங்கையூா் முத்தமிழ் நகா் 8-ஆவது பிளாக்கில் 191-ஆவது தெருவில் உள்ள மாநகராட்சி மைதானத்தில், அப்பகுதி மக்கள் தங்களது காா், ஆட்டோ, மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதி மக்கள், தங்களது வாகனங்களை அங்கு நிறுத்தியிருந்தனா்.

இந்நிலையில், நள்ளிரவு அந்தப் பகுதிக்கு மது போதையிலும், கஞ்சா போதையிலும் வந்த சில மா்ம நபா்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை கற்களாலும், உருட்டுக் கட்டைகளாலும் அடித்து உடைத்தனா். வாகனங்கள் உடைக்கப்படும் சப்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள், அந்த நபா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

போதையில் இருந்த நபா்கள், பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவா்களை தாக்க முயன்றுள்ளனா். இதையடுத்து பொதுமக்கள், கொடுங்கையூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அங்கு வந்த நிலையில், அந்த நபா்கள் அங்கிருந்து தப்பினா்.

இச்சம்பவத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 8 காா்கள், 5 ஆட்டோக்கள் என 13 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இது தொடா்பாக கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சோ்ந்த 5 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.