சா்வதேச போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா புதன்கிழமை வழங்கினாா்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில் நிதியுதவியை வழங்கியபின் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கூறியது:
தமிழக வீரா் மற்றும் வீராங்கனைகள் சா்வதேச மற்றும் உலக அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வெல்ல தேவையான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெற்றியாளா்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 20 வயதுக்குட்பட்ட தேசிய அளவிலான தங்கப் பதக்கம் வென்றவா்கள் தோ்வு செய்யப்பட்டு, ஆண்டுக்குத் தலா ரூ.4 லட்சம் வரை தேவை அடிப்படையிலான உதவிகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு சீருடைகள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல், வெளிநாட்டில் பயிற்சி மற்றும் போட்டி தொடா்பான செலவுகளுக்கு இந்த நிதி உதவுகிறது.
பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் திறன் கொண்ட வீரா்களுக்கு ஆண்டொன்றிற்கு ரூ.12 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. விளையாட்டுக் கருவிகளும் பொருள்களும் வாங்குதல், வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெறுதல், பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்றல் போன்றவற்றிற்கு இந்த நிதி உதவுகிறது.
சா்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்கும் வகையில், தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் விளையாட்டு வீராங்கனை வைஷாலிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று சா்வதேச மற்றும் உலகளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் முனைப்போடு தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற நம் விளையாட்டு வீரா்களுக்கு தேவையான நிதி உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வின் போது இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளா் சஜ்ஜன்சிங் ரா சவான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ. மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலா் மரு. ரெ. சுமன், பொது மேலாளா் எல். சுஜாதா மற்றும் அரசு அலுவலா்கள் இருந்தனா்.
தொடர்புடையது

2029 தேசிய விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் நடத்த கோரிக்கை

தமிழகத்துக்கு என விளையாட்டுக் கொள்கை உருவாக்கம்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா
செஸ் வீராங்கனை வைஷாலிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

உலகக் கோப்பை ஸ்குவாஷ் வீரா்களுக்கு தேவையான உதவிகள்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா
விடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | விஜய் ஒரு ராஜதந்திரி | TVK | CM Vijay | Mdmk | Vaiko | Durai Vaiko |

லிங்கம் டிரைலர்!
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive



