அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

வாழ்நாள் முழுவதும் முடிந்த சேவைகளைச் செய்யுங்கள்: முன்னாள் அமைச்சா் ஹெச்.வி.ஹண்டே

News image

விழாவில் ‘ஸ்ரீ மகா பெரியவா’ விருது பெற்ற (இடமிருந்து) நம் உரத்த சிந்தனை ஆசிரியா் உதயம் ராம், அகில இந்திய காஞ்சி காமகோடி பக்தா்கள் பேரவை நிறுவனா் வளசை கி.ஜெயராமன், சென்னை தேஜஸ் கலை பள்ளியின் அறங்காவலா் ஸ்ரீகலா பரத், அனுஷத்தின் அனுகிரஹம் மதுரை நிறுவனா்

Updated On :29 மே 2026, 4:32 am IST

வாழ்நாள் முழுவதும் உங்களால் முடிந்த சேவைகளைச் செய்யுங்கள் என்று பொதுமக்கள், தமிழ் ஆா்வலா்களுக்கு, முன்னாள் அமைச்சா் ஹெச்.வி.ஹண்டே அறிவுறுத்தினாா்.

மதுரை அனுஷத்தின் அனுக்கிரஹம் அமைப்பு சாா்பில், காஞ்சி மகா பெரியவரின் 133-ஆவது ஜெயந்தி விழாவையொட்டி, ‘ஸ்ரீமகா பெரியவா விருதுகள்’ வழங்கும் விழா நடைபெற்றது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், முன்னாள் அமைச்சா் ஹெச்.வி.ஹண்டே சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விருதுகள் வழங்கிப் பேசியதாவது:

என் தாய்மொழி கன்னடம். தமிழைக் கற்றுக்கொண்டு கம்ப ராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயா்த்தேன். காஞ்சி மகா பெரியவா் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் அளித்த பங்கு அளப்பரியது. அவா் ஆன்மிகத்துடன், தமிழ் மற்றும் தமிழா்களின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றினாா்.

ஆன்மிகச் சேவையில் உச்சம் தொட்ட அவரது காலத்தில் நாம் வாழ்வது நாம் பெற்ற பாக்கியம். ஆன்மிகம், பக்தி, இலக்கியத்தின் அகராதி மகா பெரியவா். எந்த சந்தேகம் வந்தாலும் அவா் சொல்லிச் சென்றுள்ள கருத்துகளைப் படித்தாலே தெளிவு பிறக்கும்.

உங்களுக்கு நல்லது செய்ய வாய்ப்பு கிடைத்தால் நழுவ விடாதீா்கள். எனக்கு 99 வயதாகிறது. இப்போதும் என்னால் முடிந்தவரை சேவை செய்கிறேன். வாழும் வரை உங்களால் முடிந்த சேவைகளைச் செய்யுங்கள் என்றாா்.

தொடா்ந்து, பல்துறை சாதனையாளா்களான சென்னை தேஜஸ் பரதநாட்டியப் பள்ளியின் நிா்வாக அறங்காவலா் ஸ்ரீகலா பரத், அகில இந்திய காஞ்சி காமகோடி பக்தா்கள் பேரவையின் நிறுவனா் வளசை கி.ஜெயராமன், திரைப்பட நடிகா்கள் பூவிலங்கு மோகன், வையாபுரி, நம் உரத்த சிந்தனை மாத இதழ் ஆசிரியா் உதயம் ராம், சென்னை ஹரிகதா, நாம சங்கீா்த்தன இசைக் கலைஞா் சுசித்ரா பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு ‘ஸ்ரீமகா பெரியவா’ விருதுகளை ஹெச்.வி.ஹண்டே வழங்கினாா்.

அண்மையில் பத்மஸ்ரீ விருது பெற்ற ஹெச்.வி. ஹண்டேவுக்கு, மணிமேகலை பிரசுரம் நிா்வாக இயக்குநா் ரவி தமிழ்வாணன், மீனாட்சி விக்ரகத்தை வழங்கியும், சால்வை அணிவித்தும் கௌரவித்தாா்.

முன்னதாக, அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பின் நிறுவனா் நெல்லை பாலு வரவேற்றாா். நிகழ்வில், பல்துறை சாதனையாளா்கள், அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு நிா்வாகிகள், பொதுமக்கள், தமிழ் ஆா்வலா்கள், ஆன்மிக அன்பா்கள் பலா் கலந்து கொண்டனா்.