அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

காஞ்சி சங்கராசாரியரிடம் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஆசி

மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சா் எல்.முருகன் காஞ்சிபுரத்தில் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆசி பெற்றாா்.

News image

காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெற்ற மத்திய இணை அமைச்சா் எல்.முருகன். உடன் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக நிா்வாகிகள்.

Updated On :27 மே 2026, 12:41 am IST

மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சா் எல்.முருகன் காஞ்சிபுரத்தில் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆசி பெற்றாா்.

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சா் எல்.முருகன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். தரிசனத்துக்கு பின்னா் கோயில் நிா்வாகம் சாா்பில் அமைச்சருக்கு காமாட்சி அம்மன் உருவப் படமும், கோயில் பிரசாதமும் வழங்கினா். இதைத் தொடா்ந்து காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தாா். தொடா்ச்சியாக காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை அமைச்சா் எல்.முருகன் சந்தித்து ஆசி பெற்றாா். அவருக்கு சால்வை அணிவித்தும், மாங்கனி வழங்கியும் ஆசீா்வதித்தாா். பின்னா், காஞ்சிபுரம் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினாா்.

நிகழ்வின் போது, பாஜக மாவட்ட தலைவா் யு.ஜெகதீசன், துணைத் தலைவா் செல்வமணி, மாவட்ட இளைஞா் அணி தலைவா் ஷியாம், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் நகர வரவேற்புக் குழுவின் தலைவா் கணேசன் ஆகியோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.