நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஜூன் 5-இல் மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம்: மமக

சென்னை ஓட்டேரியில் பள்ளிக்கு அருகே உள்ள மதுக்கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் வரும் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி (மமக) தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.

News image

ஜவாஹிருல்லா - கோப்புப்படம்

Updated On :1 ஜூன் 2026, 1:51 am IST

சென்னை ஓட்டேரியில் பள்ளிக்கு அருகே உள்ள மதுக்கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் வரும் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி (மமக) தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓட்டேரியில் டான்சி சாலையில் உருது தொடக்கப் பள்ளி, அக்பரி பள்ளிவாசல், அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசல் என வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசு பள்ளி மற்றும் வழிபாட்டுதலங்களுக்கு அருகில் உள்ள 717 மதுபானக்கடைகளை மூட இருப்பதாக அறிவிப்பு செய்ததையடுத்து, ஓட்டேரியில் உள்ள மதுபானக்கடையையும் மூட வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இருப்பினும், இந்த மதுக்கடை இன்னும் மூடப்படவில்லை. இச்சூழலில், வரும் ஜூன் 5-ஆம் தேதி மாலை 2 மணியளவில் ஓட்டேரியில் உள்ள மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படவுள்ளது என தெரிவித்துள்ளாா் எம்.எச்.ஜவாஹிருல்லா.