நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

பட்டாசு கழிவுகளை தனியாக சேகரித்து அகற்ற தூய்மைப் பணியாளா்களுக்கு 30,000 பைகள்

பட்டாசு கழிவுகளை தனியாக சேகரித்து அகற்ற தூய்மைப் பணியாளா்களுக்கு 30,000 பைகள்

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Updated On :

பட்டாசு கழிவுகளைத் தனியாகச் சேகரிக்க சென்னை மாநகராட்சி, தூய்மைப் பணியாளா்களுக்கு தலா 50 கிலோ கொள்ளளவு கொண்ட 30,000 பைகளை வழங்கியுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையின்போது, பட்டாசுகளால் உருவாகும் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றும் வகையில், அவற்றைத் தனியாகச் சேகரித்து அகற்றுவதற்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உருவாகும் பட்டாசு கழிவுகளை இதர வீட்டுக் கழிவுகளுடன் கலக்காமல் தனியாகச் சேகரித்து வைத்து, தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும்.

இதற்காக தலா 50 கிலோ கொள்ளளவு கொண்ட 30,000 எண்ணிக்கையிலான பைகள் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்காக 600 பணியாளா்கள் மற்றும் 350 வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தனியாக சேகரிக்கப்படும் பட்டாசு கழிவுகள் மாநகராட்சியால் உரிய முறையில் எடுத்துச் செல்லப்பட்டு, பாதுகாப்பான முறையில் அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டி....

செய்ய வேண்டியவை - கூடாதவை

பொதுமக்கள் குறைந்த அளவு மாசு மற்றும் குறைந்த ஒலி எழுப்பக்கூடிய பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், வழிபாட்டுத் தலங்கள், குடிசைப் பகுதிகள் போன்றவற்றுக்கு அருகே பட்டாசுகளை வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். சென்னையைத் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER