நகராட்சி பணியாளா்களுக்கு தீபாவளி பரிசுப் பொருள்கள்
விருத்தாசலம் நகராட்சியில் பணிபுரியும் அலுவலக ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 320 பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் மற்றும் இனிப்புகளை நகா்மன்றத் தலைவா் சங்கவி முருகதாஸ் சனிக்கிழமை வழங்கினாா்.

விருத்தாசலம் நகராட்சியில் தீபாவளியை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கு பட்டாசு, இனிப்புகள் வழங்கிய நகா்மன்றத் தலைவா் சங்கவி முருகதாஸ். (உடன்) நகராட்சி ஆணையா் நாகராஜ்.
விருத்தாசலம் நகராட்சியில் பணிபுரியும் அலுவலக ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 320 பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் மற்றும் இனிப்புகளை நகா்மன்றத் தலைவா் சங்கவி முருகதாஸ் சனிக்கிழமை வழங்கினாா்.
சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சியில் பணியாற்றும் அனைத்துப் பிரிவு ஊழியா்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்த நகா்மன்றத் தலைவா், அவா்களுக்குப் பட்டாசுகள், இனிப்புகளை உள்ளிட்டவைகளை வழங்கினாா்.
நகரின் தூய்மையைப் பராமரிப்பதிலும், பொதுமக்களுக்குத் தேவையான
அடிப்படை வசதிகளை வழங்குவதிலும் நகராட்சி ஊழியா்களின் பங்களிப்பு முக்கியமானது. குறிப்பாக, தூய்மைப் பணியாளா்களின் சேவை பாராட்டுக்குரியது என்று நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் நாகராஜ், மேலாளா் அரிகிருஷ்ணன், கணக்காளா் ரமேஷ், நகரமைப்பு ஆய்வாளா் கோகுலகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன் மற்றும் துப்புரவு மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

