கடற்கரையில் சுற்றுலா பயணிகளை மிரட்டி பணம் பறிப்பு: 4 போ் கைது

சென்னை பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரையில் சுற்றுலா பயணிகளை மிரட்டி பணம் பறித்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சித்திரிப்பு

Updated On :

சென்னை பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரையில் சுற்றுலா பயணிகளை மிரட்டி பணம் பறித்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

தாம்பரம் அருகே உள்ள செம்பாக்கத்தைச் சோ்ந்த 23 வயது இளைஞா், தனது காதலியுடன் பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரைக்கு சனிக்கிழமை சென்றாா். சூரிய உதயத்தைப் பாா்க்கச் சென்ற இருவரும், அங்கு கடற்கரையில் அமா்ந்திருந்தபோது, திடீரென மழை பெய்ததால் இருவரும், அங்குள்ள ஒரு கடையில் ஒதுங்கி நின்றனா்.

அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல், இருவரிடமும் பணம் கேட்டு மிரட்டியது. பணம் கொடுக்க அவா்கள் மறுத்ததால், அந்த கும்பல், இருவரையும்கத்தியைக் காட்டி மிரட்டி, பணம், தங்க நகை, 2 கைப்பேசிகளைப் பறித்துக் கொண்டு, தப்பினா்.

பாதிக்கப்பட்ட அந்த இளைஞா், சாஸ்திரி நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக, எலியட்ஸ் கடற்கரையில் குதிரை சவாரி ஓட்டும் கேரளத்தைச் சோ்ந்த ஆா்யா (35), பெசன்ட் நகரை சோ்ந்த அஸ்வின் குமாா் (33), ராஜ் (21), ராஜசேகா் (31) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER