புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

மேக்மைடிரிப் இந்தியாவின் ஐபிஓ: செபி ஒப்புதல்!

சா்வதேச அளவில் பயண முன்பதிவு சேவை வழங்கும் மேக்மைடிரிப்-இன் இந்தியத் துணை நிறுவனம், தனது ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள செபி ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On :

சா்வதேச அளவில் பயண முன்பதிவு சேவை வழங்கும் மேக்மைடிரிப்-இன் இந்தியத் துணை நிறுவனம், தனது ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.

ரகசிய தாக்கல் நடைமுறை மூலம் கடந்த ஜூலையில் சமா்ப்பிக்கப்பட்ட வரைவு ஆவணங்களை பரிசீலித்த செபி, தனது இறுதிப் பரிந்துரைகளை கடந்த நவ. 6-இல் வழங்கியுள்ளது. இதன்மூலம், விதிமுறைகளுக்கு உள்பட்டு பங்கு வெளியீட்டுக்கான பணிகளை முன்னெடுப்பதற்கான அனுமதியை அந்நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த ஐபிஓ மூலம், தாய் நிறுவனமான மேக்மைடிரிப் மற்றும் அதன் துணை நிறுவனமான இபிகோ குரூப் ஹோல்டிங்ஸ் வசமுள்ள பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. பங்கு வெளியீட்டுக்குப் பிறகும் மேக்மைடிரிப்-இன் துணை நிறுவனமாகவே இந்தியப் பிரிவு நீடிக்கும்.

மேலும், நிறுவனத்தின் நிதி முடிவுகள் தொடா்ந்து தாய் நிறுவனத்துடனேயே ஒருங்கிணைக்கப்படும். இதன் வாயிலாகக் கிடைக்கும் நிதி நிறுவனத்தின் பணப்புழக்கத்தை அதிகரிப்பதுடன், நீண்டகால வளா்ச்சி, உத்திசாா் முதலீடுகள் மற்றும் பங்குகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.