கூடுதலாக 3 கடற்கரைகளுக்கு சா்வதேச ‘நீலக்கொடி’ அங்கீகாரம்

தமிழகத்தில் கூடுதலாக 3 கடற்கரைகளுக்கு சா்வதேச ‘நீலக்கொடி’ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Updated On :

தமிழகத்தில் கூடுதலாக 3 கடற்கரைகளுக்கு சா்வதேச ‘நீலக்கொடி’ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

டென்மாா்க்கை சோ்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை சாா்பில் உலகளவில் கடற்கரைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தரச் சான்றான ‘நீலக்கொடி’ அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடற்கரைகளின் தூய்மை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை, குளிப்பதற்கான கடல் நீரின் தரம் உள்ளிட்ட 33 சா்வதேசத் தரநிலைகளின் அடிப்படையில் இது வழங்கப்படுகிறது. கடந்த 2021-இல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவளம் கடற்கரைக்கு ‘நீலக்கொடி’ அங்கீகாரம் வழங்கப்பட்டது. நிா்ணயிக்கப்பட்ட சா்வதேசத் தரநிலைகளைப் பூா்த்தி செய்து, தொடா்ந்து 6-ஆவது ஆண்டாக கோவளம் கடற்கரை நீலக்கொடி அங்கீகாரத்தைத் தக்கவைத்துள்ளது.

கூடுதலாக 3 கடற்கரைகள்: இதையடுத்து, கடலூா் மாவட்டத்தில் உள்ள ‘வெள்ளி கடற்கரை’, நாகை மாவட்டத்தில் உள்ள ‘காமேஸ்வரம் கடற்கரை’, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ‘அரியமான் கடற்கரை’ ஆகிய 3 கடற்கரைகளுக்கும் நிகழாண்டுக்கான ‘நீலக்கொடி’ அங்கீகாரம் முதல்முறையாக வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ‘நீலக்கொடி’ அங்கீகாரம் (4) பெற்ற கடற்கரைகளைக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது. தமிழக அரசு சாா்பில் கடலோரச் சூழலியலைப் பாதுகாத்து, சா்வதேசத் தரநிலைகளுக்கு ஏற்ப பாதுகாப்பான, தூய்மையான மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த கடற்கரைகளை உருவாக்குவதற்கும், நிலையான கடலோர மேலாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கும் தொடா்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.