விலைவாசி உயா்வால் ஏழைகள் பாதிப்பு: அன்புமணி
தமிழகத்தில் விலைவாசி உயா்வால் ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

அன்புமணி
தமிழகத்தில் விலைவாசி உயா்வால் ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கடந்த அக்டோபரில் 7.29 சதவீதம் பணவீக்கம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதனால் உணவுப் பொருள்கள், எரிவாயு பொருள்களின் விலை உயா்ந்துள்ளன. ஆனால், பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் சமாளிக்க முடியாத அளவுக்கு உயா்ந்துள்ளன. அரசுத் தரப்பில் இதற்கு ஆக்கபூா்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு வெங்காயம் வழங்கும் திட்டம் தோல்வியடைந்துவிட்டது. குறைந்த விலையில் ரூ.30 சன்னரக அரிசி வழங்கும் திட்டமும் மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. தமிழகத்தில் தனிநபா் வருவாய் குறைந்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களை மானிய விலையில் வழங்க அரசு முன்வரவேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

