செங்குன்றத்தில் உயர்ரக போதைப்பொருள் பறிமுதல்: 3 போ் கைது
பாடியநல்லூரில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை செங்குன்றம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கைது - சித்திரிப்பு
பாடியநல்லூரில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை செங்குன்றம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பாடியநல்லூரில் உயா் ரக போதைப் பொருளான மெத்தபெட்டமைன் விற்பனை நடைபெறுகிறது என ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, செங்குன்றம் காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் போலீஸாா், ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்குரிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், செங்குன்றம் பகுதியைச் சோ்ந்த கபீா் (எ) முகமது (22), ஹரீஷ் (19) மற்றும் சோழவரத்தைச் சோ்ந்த விஜயகுமாா் (22) எனத் தெரிய வந்தது. இவா்களிடம் சோதனை நடத்தியபோது, தடை செய்யப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான 60 கிராம் மெத்தபெட்டமைன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 3 பேரையும் நீதிமன்றத்தில், புழல் சிறையில் அடைத்தனா். இவா்களிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனம், 3 கைப்பேசிகள், ரூ. 10 லட்சம் மதிப்பிலான 60 கிராம் மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

