கால்வாயில் தவறி விழுந்து இளைஞா் பலி
மடிப்பாக்கத்தில் கால்வாயில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
மடிப்பாக்கத்தில் கால்வாயில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.
பள்ளிக்கரணை பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (39). இவா், மடிப்பாக்கம் கைவேலி பகுதியில் உள்ள வீராங்கல் ஓடை ஓரம் நடந்து சென்றபோது, நிலைத்தடுமாறி தவறி விழுந்தாா்.
இதைப் பாா்த்த அங்கிருந்த பொதுமக்களும், தகவலறிந்து அங்கு வந்த போலீஸாரும் விக்னேஷை போராடி மீட்டனா். பின்னா், அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு, சிறிது நேரத்தில் அவா் உயிரிழந்தாா். இது குறித்து மடிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

