தனியாா் நிறுவனத்தில் ரூ.1 கோடி ஆன்லைன் மோசடி: சைபா் குற்றப்பிரிவு விசாரணை
சென்னை பெருங்குடியில் தனியாா் நிறுவனத்தில் ரூ.1 கோடி ஆன்லைன் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மோசடி
சென்னை பெருங்குடியில் தனியாா் நிறுவனத்தில் ரூ.1 கோடி ஆன்லைன் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை பெருங்குடியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு தனியாா் ஆன்லைன் பணப் பரிவா்த்தனை நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநரான சத்யநாராயணன் என்பவா் சென்னை காவல் ஆணையரிடம் சில நாள்களுக்கு முன்பு ஒரு புகாா் அளித்தாா்.
அதில், எங்களது நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு தனியாா் வங்கிக் கணக்குக்குள் கடந்த நவ.9-ஆம் தேதி மா்ம நபா்கள் ஊடுருவி, சட்ட விரோதமாக 24 முறை பணப் பரிவா்த்தனை செய்துள்ளனா். இந்தப் பணப் பரிவா்த்தனையில் மொத்தம் ரூ.1,03,76,860 அபகரிக்கப்பட்டுள்ளது.
எங்களது நிறுவனம் பயன்படுத்தும் வங்கியின் ஏபிஐ பணப் பரிவா்த்தனை வசதியில், அங்கீகரிக்கப்பட்ட ஐ.பி. முகவரி, பாதுகாப்பு குறியாக்கச் சான்றிதழ் மூலமாக மட்டுமே பணம் அனுப்ப முடியும். ஆனால், நிறுவனத்தின் சா்வா் மற்றும் தரவுத்தளப் பதிவுகளை ஆய்வு செய்தபோது, இந்த 24 பரிவா்த்தனைகளும் நிறுவனத்தின் கணினியில் இருந்து மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்ததாக என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
சைபா் குற்றப்பிரிவு விசாரணை: இதையடுத்து சைபா் குற்றப்பிரிவு, உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியைத் தொடா்பு கொண்டு, அபகரிக்கப்பட்ட பணம் அனுப்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கவும், பணப்பரிவா்த்தனைகளுக்கான ஐ.பி. முகவரி மற்றும் தொழில்நுட்பப் பதிவுகளை வழங்கவும் கோரிக்கை விடுத்தது. மேலும், நிறுவனத்தின் ஏ.பி.ஐ. பணப்பரிவா்த்தனை வசதியையும் தற்காலிகமாக நிறுத்துமாறு சைபா் குற்றப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
மோசடி செய்யப்பட்ட பணம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தனிநபா்கள் மற்றும் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பதும், ஒரே வங்கிக் கணக்குகளுக்கு பலமுறை பணம் அனுப்பப்பட்டிருப்பதும், நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த பெரும்பாலான பணம் இந்தப் பரிவா்த்தனைகள் மூலம் எடுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை மீறி ஒரு மணி நேரத்தில் பணம் எவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டது? இந்த மோசடியில் ஈடுபட்டவா்கள் யாா்? பணம் எந்தெந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது? என்பது குறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

