குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

தமிழக கோயில்களின் தணிக்கை அறிக்கைகளின் சுருக்க விவரங்கள் பதிவேற்றும் பணி 2 மாதத்தில் முடிக்கப்படும்: இந்து சமய அறநிலையத் துறை தகவல்

தமிழகத்தில் தணிக்கைக்குள்படுத்த வேண்டிய கோயில்களின் தணிக்கை அறிக்கைகளின் சுருக்கமான விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் 2 மாத காலத்துக்குள் முடிக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை

Updated On :

தமிழகத்தில் தணிக்கைக்குள்படுத்த வேண்டிய கோயில்களின் தணிக்கை அறிக்கைகளின் சுருக்கமான விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் 2 மாத காலத்துக்குள் முடிக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களின் வருடாந்திர வருவாய், செலவுகள் தொடா்பான கணக்குகளின் தணிக்கை அறிக்கைகளை இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரி மயிலாப்பூரைச் சோ்ந்த டி.ஆா்.ரமேஷ் கடந்த 2023-ஆம் ஆண்டில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 6,931 கோயில்கள் தொடா்பான தணிக்கை அறிக்கைகளின் சுருக்கமான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பிறகோயில்களின் தணிக்கை அறிக்கை விவரங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு பிளீடா் ஆா்.பரணிதரன், இதுவரை தணிக்கை விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள கோயில்களின் விவரங்கள் தொடா்பான அறிக்கையை தாக்கல் செய்தாா்.

அப்போது மனுதாரா் தரப்பில், தணிக்கை அறிக்கையின் சுருக்க வடிவத்தில்கூட, இடம்பெற வேண்டிய முக்கிய விவரங்கள் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில், தணிக்கைக்கு உள்படுத்தப்பட்ட வேண்டிய கோயில்களின் தணிக்கை அறிக்கைகளின் சுருக்க விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் 2 மாத காலத்துக்குள் நிறைவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் டிச. 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.