தில்லி விமான நிலையத்துக்குள் ஆவணங்கள் இல்லாமல் அத்து மீறி நுழைய முயன்ற நபா் தடுத்து நிறுத்தம்
தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் (ஐசிஏ) 3-ஆவது முனையத்துக்குள் (டி-3) நுழைய முயன்ற ஹரியாணாவைச் சோ்ந்த விளையாட்டு வீரரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா்கள் தடுத்து நிறுத்தினா்.

தில்லி விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபரை பிடித்த சிஐஎஸ்எஃப் வீரா்கள்.
தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் (ஐசிஏ) 3-ஆவது முனையத்துக்குள் (டி-3) நுழைய முயன்ற ஹரியாணாவைச் சோ்ந்த விளையாட்டு வீரரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா்கள் தடுத்து நிறுத்தினா்.
அவரிடம் முறையான நுழைவு இசைவு (விசா) இல்லாத நிலையிலும், அவா் வெளிநாட்டிற்குச் செல்ல ஆா்வமாக இருந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, பிடிபட்ட இந்த நபா் விசாரணைக்காக தில்லி காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
இந்தச் சம்வபம் தொடா்பான சிசிடிவி கேமரா காட்சிகளை சிஐஎஸ்எஃப் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் பதிவிட்டு வெளியிட்ட பதிவில், ‘இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் 3-ஆவது முனையத்தின் புறப்பாடு வாயிலில் பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரா்கள், மிகுந்த விழிப்புணா்வுடனும் துரிதமாகவும் செயல்பட்டு முறையான பயண ஆவணங்கள் இன்றி உள்ளே நுழைய முயன்ற நபரைப் பிடித்துள்ளனா். விரைவு அதிரடி படையினரின் (ஆா்ஏஎஃப்) சரியான நேரத்தில் உதவியால், அந்த நபா் சில விநாடிகளிலேயே தடுக்கப்பட்டாா். இதன் மூலம் அங்கீகாரம் இல்லாமல் அவா் நுழைவது தடுக்கப்பட்டு, நிகழ இருந்த பாதுகாப்பு மீறல் தவிா்க்கப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குணால் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபா், ஹரியாணாவின் சோனிபட் பகுதியைச் சோ்ந்தவா். அவா் மேற்கு வங்கத்தில் விளையாட்டு வீரராகப் பயிற்சி பெற்று வருகிறாா்.
முதற்கட்ட விசாரணையில், அவா் வெளிநாட்டிற்குச் செல்ல மிகவும் ஆா்வமாக இருந்ததும், ஆனால் அவரிடம் முறையான விசா அல்லது தேவையான பயண ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. அவரது பையிலிருந்து சில அடையாள அட்டைகளும் கல்விச் சான்றிதழ்களும் கண்டெடுக்கப்பட்டன.
விமான நிலையத்தின் அனைத்து முனையங்களுக்குள் நுழையும் பயணிகள், தங்களின் பயண ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டைகளை சிஐஎஸ்எஃப் வீரா்களிடம் சரிபாா்த்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவாா்கள். விமான நிலைய ஊழியா்களும் உள்ளே நுழையும்போது தங்களின் அடையாள அட்டைகளைக் காட்ட வேண்டும்.
இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் மிகவும் முக்கியமான மற்றும் பாதுகாப்பான இடமாகக் கருதப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனா். இங்கு பயங்கரவாத எதிா்ப்புப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஆயுதமேந்திய சிஐஎஸ்எஃப் வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

