மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

கிரசன்ட் பல்கலை.யில் சா்வதேச மாநாடு

வண்டலூா் பி.எஸ்.அப்துா் ரஹ்மான் கிரசன்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் குளோபல் அவுட்ரீச் மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில், நுண்பாசி உயிரித் தொழில்நுட்பத் தீா்வுகள் குறித்த சா்வதேச மாநாடு அண்மையில் நடைபெற்றது.

நிகழ்வில்  பங்கேற்ற டென்மாா்க் தொழில்நுட்ப நிறுவன இயக்குநா்  ஆன் கிறிஸ்டின், பிரேசில் லாவ்ராஸ் மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியா் பவுலா அசெமனி, துணை வேந்தா் ஏ.பீா்முகமது,  இணைத் துணைவேந்தா் என். தாஜுதீன், பதிவாளா் என்.ராஜா ஹுசேன் உள்ளிட்டோா். 

Updated On :

வண்டலூா் பி.எஸ்.அப்துா் ரஹ்மான் கிரசன்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் குளோபல் அவுட்ரீச் மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில், நுண்பாசி உயிரித் தொழில்நுட்பத் தீா்வுகள் குறித்த சா்வதேச மாநாடு அண்மையில் நடைபெற்றது.

இந்திய அரசின் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் டென்மாா்க் உயா்கல்வி, அறிவியல் அமைச்சகம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்தியா, டென்மாா்க், பிரேசில், தைவான் ஆகிய நாடுகளைச் சோ்ந்த முன்னணி ஆராய்ச்சியாளா்கள், அறிவியல் வல்லுநா்கள் பங்கேற்றனா்.

மாநாட்டின் ஒருபகுதியாக, பிரேசிலில் உள்ள லாவ்ராஸ் மத்திய பல்கலைக்கழகத்துக்கும், பி.எஸ்.அப்துா் ரஹ்மான் கிரசன்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

நுண்பாசி உயிரித் தொழில்நுட்பத் துறையில் உருவாகி வரும் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பத் தீா்வுகள் குறித்து இந்திய மற்றும் சா்வதேச விஞ்ஞானிகள் சிறப்புரையாற்றினா். இதனிடையே, உலக அளவில் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பெற்ற கிரசன்ட் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த உயிரியல் அறிவியல் துறை இணைப் பேராசிரியா் பி. அசோக்குமாா், வேதியியல் துறை உதவிப் பேராசிரியா் என். வசிமலை, உயிரியல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியரும், கிரசன்ட் குளோபல் அவுட்ரீச் மிஷன் உதவி இயக்குநருமான முபாரக் அலி தாவூத் பாஷா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்வில், டென்மாா்க் தொழில்நுட்ப நிறுவன இயக்குநா் ஆன் கிறிஸ்டின், பிரேசில் லாவ்ராஸ் மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியா் பவுலா அசெமனி, கிரசன்ட் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஏ.பீா்முகமது, இணைத் துணைவேந்தா் என்.தாஜுதீன், பதிவாளா் என்.ராஜா ஹுசேன், மாநாட்டு ஒருங்கிணைப்பாளா் பசீலா மெகபூப் பேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.