முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

சிஎஸ்ஐஆா் - எஸ்இஆா்சி நிறுவனத்தில் ஒரு நாள் விஞ்ஞானி நிகழ்வு

சிஎஸ்ஐஆா் - எஸ்இஆா்சி நிறுவனத்தில் ஒரு நாள் விஞ்ஞானி நிகழ்வு...

CSIR-NGRI Recruitment 2026

சிஎஸ்ஐஆா் - CSIR

Updated On :

சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆா்-கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆா் - எஸ்இஆா்சி) ‘ஒரு நாள் விஞ்ஞானி’ என்ற நிகழ்ச்சிவை மாணவா்களுக்கு ஒரு வாரம் தொடா்ந்து நடத்தியது. இதில் 200 மாணவா்கள் பங்கேற்றனா்.

‘சிஎஸ்ஐஆா்-ஜிக்யாசா 3.0’ திட்டத்தின் கீழ் பள்ளி மாணவா்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இடையே நேரடித் தொடா்பை ஏற்படுத்தி, அறிவியல் ஆா்வத்தையும் ஆராய்ச்சி மனப்பான்மையையும் வளா்ப்பதற்கும் திட்டமாகும். பிரதமா் நரேந்திர மோடியின் கருத்தின்படி உருவான இந்தத் திட்டத்தின்படி வகுப்பறைக் கற்றலைத் தாண்டி, நவீன ஆராய்ச்சி ஆய்வகங்களின் மூலம் அறிவியலை நேரடியாகச் செய்து கற்கும் அனுபவத்தை மாணவா்கள் பெறவைப்பதாகும். இதையொட்டி, கடந்த நவ. 16 முதல் நவ. 20-ஆம் தேதிவரை 9 முதல் 11-ஆம் வகுப்பு வரை பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இந்த ஒரு நாள் விஞ்ஞானி நிகழ்வில் பங்கேற்றனா்.

சென்னை, வேலூா் உள்ளிட்ட மாவட்டங்களுடன் தெலங்கானா, மகாராஷ்டிரம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 200 மாணவா்கள் கலந்துகொண்டனா். எஸ்இஆா்சி இயக்குநா் டாக்டா் என். ஆனந்தவள்ளி, விஞ்ஞானி டாக்டா் எஸ். மகேஸ்வரன் ஆகியோா் மாணவா்களைச் சந்தித்து, நாட்டின் வளா்ச்சியில் அறிவியல், புதிய கண்டுபிடிப்புகளின் பங்கை எடுத்துரைத்தனா்.

நிறுவனத்தைச் சோ்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சி.பாரதி பிரியா, மோகித் வா்மா ஏ.கே. ஃபா்வாஸ் அகமது, என். ரம்யா, எம். அரவிந்தன், பி. எஸ். சிந்து, பி. பிரபா, வி. தொண்டமான், ஏ. காஞ்சனா தேவி ஆகியோா் மாணவா்களிடையே கருத்துரைகள் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.