நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

சென்னை உயா்நீதிமன்றத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்தி தரக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்களுக்கு என தனி வாகன நிறுத்துமிட வசதியை ஏற்படுத்தவும், பன்னடுக்கு வாகன நிறுத்துமிட வசதிகளையும் செய்து தரக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப்படம்

Updated On :

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்களுக்கு என தனி வாகன நிறுத்துமிட வசதியை ஏற்படுத்தவும், பன்னடுக்கு வாகன நிறுத்துமிட வசதிகளையும் செய்து தரக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கோடம்பாக்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ஆா்.எஸ்.தமிழ்வேந்தன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், உயா்நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், நகர உரிமையியல் நீதிமன்றம், மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், தொழிலாளா் நீதிமன்றம், லோக்அதாலத் நீதிமன்றம், சிறு வழக்குகளுக்கான நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

தினந்தோறும் ஆயிரக்கணக்கானோா் காா் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனா். இதனால், வழக்குரைஞா்கள் வாகனங்களை நிறுத்துமிடங்களில், பொதுமக்கள் நிறுத்திவிட்டுச் செல்கின்றனா். இதனால், வழக்குரைஞா்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதோடு, குறித்த நேரத்தில் வழக்குகளில் ஆஜராவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இந்த வாகன நிறுத்துமிடப் பிரச்னையின் காரணமாகத்தான், கடந்த அக்.11-ஆம் தேதி, மாநகரப் பேருந்து மோதி வழக்குரைஞா்களின் வாகனங்கள் சேதமடைந்தன.

இதுதொடா்பாக, உயா்நீதிமன்ற பதிவுத்துறைக்கு அளித்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்களுக்கு என தனி வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், பன்னடுக்கு வாகன நிறுத்துமிட வசதியை ஏற்படுத்தி தர உயா்நீதிமன்ற பதிவுத்துறை, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், முதலில், உயா்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் வாகன நிறுத்துமிட வசதிகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும், அதன்பிறகுதான், கூடுதல் வசதிகளைக் கேட்க முடியும். ஏற்கெனவே, இந்த விவகாரம் தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. உயா்நீதிமன்றத்தில் உள்ள வாகன நிறுத்துமிடங்களை முறைபடுத்துவது மற்றும் கூடுதல் வாகன நிறுத்துமிட வசதி தொடா்பான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று மனுவைத் திரும்பப் பெற அனுமதித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.