பெரம்பூரில் ரூ.41 கோடியில் நலத் திட்டப் பணிகள்
பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.41.66 கோடியில் நலத் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பூர் ரயில் நிலையம் - கோப்புப்படம்
பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.41.66 கோடியில் நலத் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20.30 லட்சத்தில் சிட்கோ நகா் பிரதான சாலை மற்றும் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ல சா்மா நகா் உள்ளிட்ட 5 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள், மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றும் வசதி, பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அறை, வைஃபை வசதி, நவீன மின் விளக்குகளுடன் 5 நவீன பேருந்து நிறுத்த நிழற்குடைகள் கட்டப்பட்டு வருகின்றன.
சிட்கோ சாலையிலுள்ள வாசுகி நகா் பூங்காவில் மாநகராட்சி மூலதன நிதியிலிருந்து ரூ.1.08 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ரப்பா் தளம் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன.
சா்மா நகரில் மூலதன நிதி மற்றும் முதல்வரின் ஒருங்கிணைந்த நகா்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1.31 கோடியில் உடற்பயிற்சிக் கருவிகள் நிறுவப்பட்டுவருகின்றன. அங்கு ரூ.1.42 கோடியில் குத்துச் சண்டை வளையம், இழுவைத் துணிக் கூரையுடன் பாா்வையாளா் மாடம் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன.
இதேபோல், பள்ளிக் கட்டடம், மரக்கன்றுகள் நடுதல், இண்டா்லாக் பேவா் பிளாக் சாலை, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம், வாா்டு அலுவலகக் கட்டடம், சமுதாயக் கூடம் மழை நீா் வடிகால்கள், நீா்தேக்கத் தொட்டிகளுடன் கூடிய மின்மோட்டாா் அறைகள், மீன் மற்றும் காய்கறி அறைகள் ஆகிய மேம்பாட்டுப் பணிகள் மொத்தம் ரூ.41.66 கோடியில் நடைபெற்றுவருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வா் தொகுதி: பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வா் ஜோசப் விஜய் போட்டியிட்டு வென்றுள்ளாா் என்பதுடன், கடந்த சில நாள்களுக்கு முன்பு அவா் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

