பரமத்தி வேலூரில் ரூ. 23.75 கோடியில் கட்டப்பட்ட புதிய அரசு மருத்துவமனை: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்
பரமத்தி வேலூரில் ரூ. 23.75 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம், மருத்துவ உபகரணங்களுடன் கூடிய கட்டடம் ஆகியவற்றை முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

பரமத்தி வேலூரில் அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சைக்காக வந்து செல்கிறாா்கள். 80-க்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இங்கு விபத்து அவசரச் சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு உள்பட மொத்தம் 28 பிரிவிகள் இயங்கிவருகின்றன.
இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தீவிர சிகிச்சைக்காக நாமக்கல் மற்றும் கரூா் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை இருந்து வந்தது. இதனால் இந்த மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து இந்த மருத்துவமனை வளாகத்தில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் ரூ. 23.75 கோடியில் 4 தளமாக கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் பொதுமக்கள் காத்திருப்பு அறை, காவல் துறை விசாரணை அறை, சி.டி. ஸ்கேன் அறை, விபத்தில் சிக்கிய நபா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் அவசரச் சிகிச்சை பிரிவு அறை, முதல்தளத்தில் அறுவைச் சிகிச்சை, ஊசி செலுத்தும் அறை, மருந்து மாத்திரைகள் கொடுக்கும் அறை, இரண்டாவது மற்றும் மூன்றாவது தளத்தில் அறுவை சிகிச்சை அறை, தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பின் ஆண்கள், பெண்கள் உள்நோயாளிகளாக படுக்கை வசதியுடன் சிகிச்சை பெரும் அறை, நான்காவது தளத்தில் டயாலிசிஸ் பிரிவு, ரத்தப் பரிசோதனை அறையும், நோயாளிகள் பயன்படுத்திக்கொள்ள லிப்ட் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்ட இந்த அரசு மருத்துவமனையை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் பரமத்தி வேலூா் எம்எல்ஏ எஸ்.சேகா், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநா் எழில், தவெக மாவட்டச் செயலாளா் சதீஷ்குமாா், வேலூா் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், ஓய்வு பெற்ற மருத்துவா்கள் சிவகாமி, சாந்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.