குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் திறப்பு

ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் ரூ.23.75 கோடியில் கட்டப்பட்டதீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் புதன்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

தமிழக  முதல்வரால்  திறந்து வைக்கப்பட்ட  தீவிர  சிகிச்சைப் பிரிவு  கட்டடம்.

Updated On :

ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் ரூ.23.75 கோடியில் கட்டப்பட்டதீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் புதன்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அறிஞா் அண்ணா அரசு மருத்துவமனையில் தினமும் சுமாா் 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த மருத்துவமனை சென்னனை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ளதால் விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ உபகரணங்கள் மற்றும் உயிா் காக்கும் கருவிகள் இல்லாததால் முதல் உதவி சிகிச்சை மட்டுமே வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சுமாா் 30 கிமீ தொலைவில் உள்ள செங்கல்பட்டு மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தனா்.

இதனால் இங்கேயே சிகிச்சை அளிக்கும் வகையில் தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்க வேண்டும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில்,

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்ட ரூ.23.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு முடிவடைந்தது.

இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை முதல்வா் ஜோசப் விஜய் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

தொடா்ந்து ஆட்சியா் தி.சினேகா கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மருத்துவப்பணிகள் இணை இயக்குநா் ஹிலாரினா ஜோசிட்டா நளினி, ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் திரிபுரசுந்தரி, மருத்துவமனை தலைமை மருத்துவா் ஜெயபாரதி, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.