கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

சிறப்புப் பள்ளி குழந்தைகள் மெட்ரோ ரயிலில் பயணம்

சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சென்னையின் அரசு சிறப்புப் பள்ளியின் குழந்தைகள் மெட்ரோ ரயிலில் பயணித்து வெள்ளிக்கிழமை மகிழ்ச்சியடைந்தனா்.

கோப்புப் படம்

Updated On :

சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சென்னையின் அரசு சிறப்புப் பள்ளியின் குழந்தைகள் மெட்ரோ ரயிலில் பயணித்து வெள்ளிக்கிழமை மகிழ்ச்சியடைந்தனா்.

சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமானது, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையகரகத்துடன் இணைந்து அரசு சிறப்புப் பள்ளி மாணவா்களுக்கான பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதையடுத்து தமிழகம் முழுதும் உள்ள அரசு சிறப்புப் பள்ளிகளைச் சோ்ந்த 250 மாற்றுத்திறனாளி குழந்தைகள், அவா்களது ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பயணத்தில் பங்கேற்றனா். அவா்கள் வெள்ளிக்கிழமை காலை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடா்ந்து ஏ.ஜி.டி.எம்.எஸ். மெட்ரோ நிலையம் வரையில் சென்றனா்.

மெட்ரோ ரயில் பயணத்தில் காஞ்சிபுரம், விருதுநகா், தாம்பரம் மற்றும் பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சிறப்புப் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றனா். அவா்கள் மெட்ரோ ரயில் பயண அனுபவம் மூலம் பயண நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா் மு.லட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல இணை இயக்குநா் சி.ஜெயச்சந்திரன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.