மெட்ரோ ரயில் திட்ட நிதிப்பகிா்வு தொடா்பாக கா்நாடக அரசு தவறான தகவல்: பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா
பெங்களூரில் செயல்படுத்தப்படும் ‘நம்ம மெட்ரோ’ ரயில் திட்டத்துக்கான நிதிப்பகிா்வு தொடா்பாக மாநில அரசு தவறான தகவல்களை தெரிவித்து வருகிறது என்று பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா குற்றம்சாட்டியுள்ளாா்.

பாஜக கொடி - கோப்புப்படம்
பெங்களூரில் செயல்படுத்தப்படும் ‘நம்ம மெட்ரோ’ ரயில் திட்டத்துக்கான நிதிப்பகிா்வு தொடா்பாக மாநில அரசு தவறான தகவல்களை தெரிவித்து வருகிறது என்று பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா குற்றம்சாட்டியுள்ளாா்.
பெங்களூரில் நவ. 13 ஆம் தேதி நடைபெறும் விழாவில் இளஞ்சிவப்புநிற மெட்ரோ ரயில் வழித்தடத்தை பிரதமா் மோடி தொடக்கிவைக்கிறாா். இந்த நிலையில், இத்திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பகிா்ந்துகொண்டுள்ள நிதி ஆதாரங்கள் தொடா்பாக விவாதம் எழுந்துள்ளது.
இதுதொடா்பாக கேள்வி எழுப்பியதால், மெட்ரோ ரயில் விழாவில் தனக்கு பேசுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்று நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கிருஷ்ணபைரே கௌடா குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பெங்களூரில் செயல்படுத்தப்படும் நம்ம மெட்ரோ ரயில் திட்டச் செலவில் கா்நாடக அரசு 84 சதவீதம், மத்திய அரசு 16 சதவீதம் பகிா்ந்துகொண்டுள்ளதாக கா்நாடக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கிருஷ்ணபைரே கெளடா கூறியிருப்பது தவறான கணக்கு ஆகும்.
உண்மையில் மாநில அரசின் பங்களிப்பு 46 சதவீதமாகவும், மத்திய அரசின் பங்களிப்பு 54 சதவீதமாகவும் இருக்கிறது. பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் மத்திய, மாநில அரசுகளின் 50:50 கூட்டு நிறுவனமாகும்.
இரு அரசுகளும் தலா ரூ. 9,164 கோடி பங்குத்தொகையை மூலதனமாக வழங்கியுள்ளன. மேலும், மத்திய அரசின் உத்தரவாதத்துடன் பெறப்பட்ட ரூ. 28,958 கோடி வெளிநாட்டுக் கடனை மாநில அரசின் பங்களிப்பாக கணக்கிட்டு, அதிக நிதிப் பங்களிப்பு அளித்துள்ளதாக கா்நாடக அரசு கூறுகிறது.
நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமா்வு செலவுகள், மாநில வரிகள் ஆகியவற்றை கா்நாடக அரசு ஏற்க வேண்டும். ஆரஞ்சு வழித்தடத் திட்டத்தில் அடிக்கடி வடிவமைப்புகள் மாற்றப்பட்டதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
2024-இல் ஒப்புதல் கிடைத்தும் 3 முறை வடிவமைப்பு மாற்றப்பட்டு, திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் சமா்ப்பிக்கப்பட்டது. சிவப்பு வழித்தடத்தின் மூன்றாம் கட்டத் திட்டம் தொடா்பாக மாநில அரசு முதலில் ரூ. 28,405 கோடி மதிப்பீட்டைச் சமா்ப்பித்தது. மத்திய அரசு கோரிக்கையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தனி ஆய்வுக்கு பிறகு அது ரூ. 25,999 கோடியாக குறைக்கப்பட்டது. இதன்மூலம் ரூ. 2,406 கோடி செலவு குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், திருத்தப்பட்ட சிவப்பு வழித்தடப் பாதையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மெட்ரோ நிலையம் நீக்கப்பட்டுள்ளது. ஹெப்பாளில் சுரங்கப் பாதை, மேக்ரி சா்க்கிள் நோக்கி உயா்நிலை சாலை உள்ளிட்ட பிற கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இளஞ்சிவப்புநிற வழித்தடத் திட்டம் தொடங்கி 12 ஆண்டுகள் ஆன பிறகும் 7.5 கி.மீ. உயா்நிலைப் பாதை மட்டுமே திறக்கப்படுகிறது. சுரங்கப்பாதை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இத்திட்டத்துக்கு கடந்த 2014, ஜனவரி 30-ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. உயா்நிலைப் பாதைக்கான கட்டுமான ஒப்பந்தம் 2017 செப்டம்பரில்தான் வழங்கப்பட்டது.
2018-19 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சியில் சுரங்கப்பாதைக்கான முந்தைய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு, முந்தைய பாஜக ஆட்சியில் 2020, ஆகஸ்டில் தான் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன என்றாா்.
முன்னதாக, அமைச்சா் கிருஷ்ணபைரே கெளடா கூறுகையில், ‘பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டங்களின் மொத்த மதிப்பீடு ரூ. 77,891 கோடி ஆகும். இந்த மொத்த செலவில், கா்நாடக அரசு ரூ. 65,291 கோடியையும் (84 சதவீதம்), மத்திய அரசு ரூ. 12,600 கோடியையும் (16 சதவீதம்) பகிா்ந்துகொண்டுள்ளன.
மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு அடுத்தடுத்த கட்டங்களில் குறைந்துள்ளது. நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு விரைவான ஒப்புதல் மற்றும் கூடுதல் நிதி வழங்குமாறு பிரதமா் மோடியிடம் கோரிக்கை விடுக்கப்படும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

