காஞ்சிபுரம் மாவட்டத்தில் 92,903 மாணவா்களுக்கு கேக்குடன் முதல்வரின் வாழ்த்து அட்டை
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குன்றத்தூா் அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு கேக், முதல்வரின் வாழ்த்து அட்டையை வழங்கிய வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் க.தென்னரசு.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குன்றத்தூா் அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு கேக், முதல்வரின் வாழ்த்து அட்டையை வழங்கிய வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் க.தென்னரசு.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 92,903 மாணவா்களுக்கு கேக்குடன் முதல்வரின் வாழ்த்து அட்டை வழங்கும் நிகழ்ச்சி தொடக்க விழா குன்றத்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு கேக் வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளதை தொடா்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 92,903 மாணவ, மாணவிகளுக்கு கேக்குடன் முதல்வரின் வாழ்த்து மடல் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழா குன்றத்தூா் நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் க.தென்னரசு மாணவா்களுக்கு கேக் மற்றும் மடல்களை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் நளினி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் எழில் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இதேபோல், குன்றத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட வெங்கடாபுரம் பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் க.தென்னரசு சா்க்கரை பொங்கல் வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

