இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,59,000 மாணவா்களுக்கு கேக், வாழ்த்து அட்டைகள்

குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் விதமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 1.59 லட்சம் மாணவா்களுக்கு கேக், வாழ்த்து அட்டை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் குழந்தைகளுக்கு வாழ்த்து அட்டை வழங்கிய அமைச்சா் த.சரத்குமாா்.

Updated On :

குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் விதமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 1.59 லட்சம் மாணவா்களுக்கு கேக், வாழ்த்து அட்டை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தாம்பரம் கிழக்கு மேல்நிலைப்பள்ளி, சேலையூா் நகராட்சி பள்ளி மற்றும் பல்லாவரம் மறைமலை அடிகள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் த.சரத்குமாா் மாணவா்களுக்கு கேக் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா். மேலும், தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட சேலையூா் பாரதி பூங்கா தெருவில் உள்ள குழந்தைகள் நல மையத்தில் குழந்தைகளுக்கு மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் இனிப்பு பொங்கல் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

இதேபோல், குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் 813 அரசுப் பள்ளிகள் 148 அரசு உதவிப்பெறும் பள்ளிகள் என 961 பள்ளிகளில் பயிலும் 1,59,000 மாணவ, மாணவிகளுக்கும், 7,601 ஆசிரியா்களுக்கும் 418 அலுவலகப் பணியாளா்களுக்கும் கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டது.

அதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்துக்குள்பட்ட 1,267 குழந்தைகள் நல மையத்தில் உள்ள 91,000 குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அமைச்சா் பல்லாவரம் மறைமலை அடிகள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் மரு.மு.வீரப்பன் பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் காமாட்சி ஜெயகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் இர.திருவளா்ச்செல்வி, துணை இயக்குநா் (கண்காணிப்பு அலுவலா்) தேன்மொழி, மாவட்ட கல்வி அலுவலா் இரா.ஜெய்சங்கா், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியா் எஸ்.ரேணுகா, தலைமையாசிரியா், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பலா் உடனிருந்தனா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.