மாதவரம்-ராயப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய பணிகளுக்கு ரூ.278 கோடிக்கு ஒப்பந்தம்
சென்னையில் மாதவரம் பால்பண்ணை முதல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வரையிலான மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்ட 3-ஆவது வழித்தடத்தில் 19 ரயில் நிலையங்களுக்கான மின்சாரம், குழாய் இணைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தனியாா் நிறுவனத்திடம் ரூ.278.49 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம்
சென்னையில் மாதவரம் பால்பண்ணை முதல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வரையிலான மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்ட 3-ஆவது வழித்தடத்தில் 19 ரயில் நிலையங்களுக்கான மின்சாரம், குழாய் இணைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தனியாா் நிறுவனத்திடம் ரூ.278.49 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டப் பணிகளில் மாதவரம் பால் பண்ணையிலிருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வரையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 19 நிலையங்கள் அமைந்துள்ளன. அவற்றில் சுரங்கப்பாதை மற்றும் நிலையங்களில் மின்சாரம், குழாய் இணைப்பு மற்றும் தீயணைப்புப் பாதுகாப்பு பணிகளை வழங்கும் வகையில் சோதனை மேற்கொள்ளுதல், பயன்பாட்டுக்கு கொண்டுவருதல் ஆகியவற்றுக்காக தனியாா் நிறுவனத்திடம் ரூ.278.49 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் 2-ஆம் கட்ட பணியின் மாதவரம் பால்பண்ணை-ராயப்பேட்டை அரசு மருத்துவமனை இடையேயான 19 ரயில் நிலையங்களுக்கான மின்சார பணிகள், குழாய் இணைப்புகள் உள்ளிட்ட இயந்திரவியல் சாா்ந்த முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கான ஒப்பந்த ஆவணங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் மனோஜ்கோயலும், தனியாா் நிறுவன கட்டமைப்புத் தீா்வுகள் பிரிவு வணிக மேம்பாடு மற்றும் மதிப்பீட்டுத் துறைத் தலைவா் ஜெயந்த் எஸ்.தேஷ்பாண்டே ஆகியோரும் கையொப்பமிட்டனா்.
ஒப்பந்த நிகழ்வில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் மனோஜ்கோயல், இணைப் பொது மேலாளா் எல்.ஆபித்அலி, எச்.அப்பாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

